ஆவின் பால் 
செய்திகள்

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு ஆவின் நிறுவனம் உதவி

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் காக்கும் வகையில் ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை:

ஆவின் நிறுவனம் கூறியிருப்பதாவது:

முதற்கட்டமாக நெல்லை, நீலகிரி மாவட்டங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆவின் முகவர்களாக நியமனம் செய்ய உள்ளனர்.

சென்னையில் ஆவின் தலைமை அலுவலகத்தில் ரூ.1,000 வைப்புத்தொகை செலுத்தி பால் வண்டி முகவராகலாம். மாவட்டங்களிலுள்ள ஆவின் பொதுமேலாளர் அலுவலகங்களிலும் ரூ.1,000 செலுத்தி முகவராகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.