ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நேற்று பகல்- இரவாக நடந்தது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்தது. முகமது ரிஸ்வான் சதம் அடித்தார். அவர் 126 பந்தில் 115 ரன்னும் (11 பவுண்டரி) கேப்டன் சோயிப் மாலிக் 60 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் மீண்டும் சதம் அடித்தார். அவர் 143 பந்தில் 153 ரன்னும் (11 பவுண்டரி, 6 சிக்சர்), உஸ்மான் கவாஜா 88 ரன்னும் எடுத்தனர். இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தனர். ஆரோன் பிஞ்ச் முதல் ஆட்டத்தில் 116 ரன்களை எடுத்து இருந்தார்.