செய்திகள்

அம்பேத்கர் சிலைகள் உடைப்பு - மர்மநபர்கள் அட்டூழியம்

உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தலைவர்கள் சிலைகள் தொடர்ச்சியாக உடைக்கப்பட்டு வருகின்றன. பல பகுதிகளில் பெரியார், அம்பேத்கர், காந்தி போன்ற தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. நேற்று ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா பகுதியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையினை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


நேற்று இரவு ராஜஸ்தானில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை