செய்திகள்

நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் டவர் அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து

அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க் நகரில் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான டிரம்ப் டவர் அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. #TrumpTower

நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான ’டிரம்ப் டவர்’ அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் பிற முன்னணி நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இதே கட்டிடத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்துவந்த டிரம்ப் அதிபர் பதவியை ஏற்றபிறகு தற்போது வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் குடியேறி விட்டார். நியூயார்க் நகருக்கு வரும்போது அவர் இங்கு தங்குவதுண்டு.

இந்நிலையில், ’டிரம்ப் டவர்’ அடுக்குமாடி கட்டிடத்தின் மேல்மாடி பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்து விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை முழுமையாக அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #tamilnews #TrumpTower

SCROLL FOR NEXT