சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே நேர் கோட்டில் பூமி வரும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து அதை மறைக்கிறது.
இந்த நிலையில் நேற்று சந்திர கிரகணம் நள்ளிரவு 12.12 மணிக்கு தொடங்கி அதிகாலை 1.31 மணிக்கு முழுமை அடைந்தது. அதன் பின் சிறிது சிறிதாக பூமியின் நிழல் சந்திரன் மீது இருந்து விலகி கொண்டு வந்தது. அதிகாலை 4.29 மணிக்கு சந்திர கிரகணம் முடிந்தது. இது மிகவும் அபூர்வமான சந்திர கிரகணம் ஆகும்.
இதுபோன்ற பாதி சந்திர கிரகணம் தான் நேற்று நள்ளிரவு நடந்தது. இது 149 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளது. இந்த சந்திர கிரகணம் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வளைகுடா, நாடுகளில் தெளிவாக காண முடிந்தது.