ஆ.ராசா 
செய்திகள்

அதிமுக அரசை அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டனர்- ஆ.ராசா பேச்சு

வரும் சட்டசபை தேர்தலில் தி.முக. வெற்றிப்பெற்று முக ஸ்டாலின் முதல்வராக அமருவார் என்று ஆ ராசா பேசியுள்ளார்.

பெரம்பலூர்:

பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பி.யுமான ராசா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், 

கட்சி நிர்வாகிகளோடு இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் அகற்ற முடிவு செய்துவிட்டனர். அதற்கு சாட்சி தான் தற்போது நடை பெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள். ஆகையால் தி.மு.க.வினர் விரைந்து சுறுசுறுப்புடன் செயலாற்றி வரும் நகர, பேரூர் உள்ளாட்சி தேர்தல்களிலும், சட்டசபை தேர்தல்களிலும் பணியாற்றி அ.தி.மு.க. அரசை அகற்ற பாடுபட வேண்டும். 

வரும் சட்டசபை தேர்தலில் தி.முக. வெற்றிப்பெற்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்வராக அமருவார் என்றார்.

SCROLL FOR NEXT