செய்திகள்

காஷ்மீர் எல்.எல்.ஏ.வின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தப்பியோடியதால் பரபரப்பு

பிடிபி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரின் தனிப்பாதுகாப்பு அதிகாரி ஏகே 47 துப்பாக்கிகளுடன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #PDP

ஸ்ரீநகர் :

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான ஆட்சிக்கு பாரதிய ஜனதா கட்சி அளித்து வந்த ஆதரவை சமீபத்தில் விலக்கிக்கொண்டதால் அம்மாநிலத்தில் மக்கள் ஆட்சி கலைக்கப்பட்டு கவனர் ஆட்சி அமலில் உள்ளது.

இதற்கிடையே, மெகபூபா முப்தியின் பி.டி.பி கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வாச்சி ஐசாஷ் அகமது மிர் என்பவரின் தனிப்பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தப்பியோடியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காஷ்மீர் மாநில போலீசார் ஊடகங்களிடம் கூறுகையில், ’ஜவகர் நகரில் உள்ள எம்.எல்.ஏ வாச்சி ஐசாஷ் அகமது மிர்க்கு சொந்தமான இல்லத்தில் இருந்து 7 ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் 2 கைத்துப்பாக்கிகளுடன் எம்.எல்.ஏ.வின் தனிப்பாதுகாப்பு அதிகாரி தப்பியோடிவிட்டார்.

தப்பியோடிய தனிப்பாதுகாப்பு அதிகாரின் பெயர் அடில் ரஷித், அவரை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடில் ரஷித் பற்றி போலீசாரிடம் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்’ என தெரிவித்தனர். #PDP

SCROLL FOR NEXT