கிரெடிட் கார்டு 
செய்திகள்

தற்பெருமையால் சிறை சென்ற அமெரிக்க பெண்

அமெரிக்காவில் 10 கோடி பயனாளர்களின் கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்களை திருடிய பெண் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பெருமை அடித்ததால் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்தவர் பெண் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பெய்ஜ் தாம்சன் (33). இவர் தனது கணினி திறமையை பயன்படுத்தி, கேபிடல் ஒன் வங்கியின் வாடிக்கையாளர்களான சுமார் 10 கோடி பேரின் கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்களை திருடியுள்ளார்.

இதுகுறித்து சமூகவலைத்தளத்திலும், கிட் கியூப் ( GitHub) என்ற இணையதளத்திலும் தற்பெருமை அடித்துள்ளார். இதை கவனித்த இணையதள பயனாளர் ஒருவர், கேபிடல் ஒன் வங்கிக்கு தகவல் அளித்துள்ளார். வங்கியும் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டதை அறிந்து புகார் அளித்துள்ளது.

SCROLL FOR NEXT