செய்திகள்

இந்தியா- நேபாளம் எல்லையில் கடத்தல் கும்பல் கைது : 93 வாள்கள் பறிமுதல்

இந்தியா-நேபாளம் எல்லையில் வாள்கள் கடத்திய கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 93 வாள்களை போலீசார் கைப்பற்றினர்.

லக்னோ:

இந்தியா-நேபாளம் எல்லையில் கடத்தல் நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் மத்திய சிறப்பு பாதுகாப்புப் படையுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ருபைஷிகா சோதனைச் சாவடியில் நடத்திய சோதனையில் இந்தியாவிலிருந்து நேபாளம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் வாள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

பேருந்தில் பயணம் செய்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த இர்ஃபான், முன்னாவர் மற்றும் ராஜூ ஆகிய மூன்று நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர். மேலும், இந்தியாவைச் சேர்ந்த இர்ஃபானையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 93 வாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

எதற்காக வாள்களை கடத்தினார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT