செய்திகள்

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு- சென்னை மண்டலத்தில் 99 சதவீதம் தேர்ச்சி

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. #CBSE #CBSE10thResults

மாலை மலர்

பாராளுமன்ற தேர்தல் முடிவு வருகிற 23-ம் தேதி வெளியாக இருப்பதால், அதற்கு முன்னதாக பள்ளி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அவ்வகையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்டன.

இந்நிலையில், சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று பிற்பகல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ-யின் cbseresults.nic.in அல்லது cbse.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக, மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

இந்த ஆண்டு நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த மண்டலத்தில் 99.85 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தையும், 95.89 சதவீத தேர்ச்சியுடன் அஜ்மீர் மண்டலம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.