அகர்தலா:
திரிபுரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள பர்ஹல்டி என்ற கிராமத்தில் 90 வயதான மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 24-ந்தேதி இரவு வீட்டில் மூதாட்டி தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் வந்து வீட்டின் கதவை தட்டினர்.
மூதாட்டி கதவு திறக்காததால் அந்த மர்ம நபர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சேர்ந்து மூதாட்டியை கற்பழித்தனர்.
இந்த சம்பவத்தால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட மூதாட்டி இதுகுறித்து யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரது உறவினர்கள் என்ன காரணம் என்று விசாரித்தபோது, தனக்கு நடந்த அவலத்தை அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மூதாட்டியின் உறவினர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கற்பழித்த மர்ம ஆசாமிகள் இரண்டு பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.