இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் குவாலியர் மாவட்டத்தில் இருந்து கடற்படை வீரர்களை ஏற்றிக் கொண்டு கராச்சி நோக்கி ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.
லாஸ்பெலா பகுதியில் உள்ள போஜி டாப் இடத்தின் அருகில் வரும்போது பஸ்சின் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் அதில் பயணித்த 9 கடற்படை வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.