செய்திகள்

திருச்சி அருகே வேன்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே வேன்-லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

திருச்சி:

நாகர்கோவில் மாவட்டத்தில் இருந்து ஒரு குழுவினர் திருப்பதி செல்வதற்காக தனியார் வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்த வேன் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட துவரங்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு லாரியுடன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மூன்று குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.