செய்திகள்

கன்னியாகுமரியில் 8 வயது சிறுமியிடம் செக்ஸ் சில்மி‌ஷம்: முதியவர் கைது

கன்னியாகுமரியில் சிறுமிக்கு சில்மி‌ஷம் செய்த முதியவர் குறித்து தாய் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவரை கைது செய்தனர்.

மாலை மலர்

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி வட்டக்கோட்டை புதுக்குளத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் (வயது 60).

இவரது பக்கத்து வீட்டில் 8 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். சம்பவத்தன்று அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பரமசிவன் வீட்டுக்குள் புகுந்து அந்த சிறுமியிடம் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். பின்னர் இதை வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

வெளியே சென்றிருந்த தனது தாயார் திரும்பி வந்ததும் சிறுமி நடந்ததை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதைக்கேட்டு தாயார் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் கன்னியாகுமரி அனைத்து போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். புகாரில் தனது மகளை மிரட்டி பக்கத்து வீட்டைச் சேர்ந்த பரமசிவன் செக்ஸ் சில்மி‌ஷம் செய்துள்ளார். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பரமசிவனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சமீபத்தில் தான் மரணம் அடைந்துள்ளார். இந்தநிலையில் சிறுமிக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சில்மி‌ஷம் செய்தது அந்த குடும்பத்தினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.