செய்திகள்

இமாச்சலப்பிரதேசம்: 7 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்

இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் 7 வயது சிறுவனை அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் கடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிம்லா:

இமாச்சலப்பிரதேசம் மாநிலம் சிட்மாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்கி என்ற 7 வயது சிறுவன் அருகிலுள்ள மார்க்கெட்டிலிருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த 6 நாய்கள் சிறுவனை தாக்கின. அவன் அலறல் சப்தம் கேட்டு வந்த கிராமத்தினர் நாய்களை துரத்த முயற்சி செய்தனர். அவர்களையும் நாய் கடித்தது.

பின்னர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாதி வழியிலேயே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுவனின் தலை, கழுத்து, தொண்டை மற்றும் வயிற்று பகுதியில் நாய் கடித்த தடங்கள் இருந்தன.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அக்கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார் செய்யப்பட்டும் மாவட்ட அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது.

SCROLL FOR NEXT