கோப்புப்படம் 
செய்திகள்

பிச்சை எடுத்த பணத்தில் கோவிலுக்கு ரூ.8 லட்சம் நன்கொடை

பிச்சை எடுத்த பணத்தில் ஒருவர் 8 லட்சம் ரூபாய் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயவாடா:

ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த 71 வயதான யாதிரெட்டி ரிக்சா இழுத்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ரிக்சா இழுக்கும் தொழிலை விட்டுவிட்டு விஜயவாடாவில் உள்ள ஒரு கோவிலின் வாசலில் பிச்சை எடுக்க தொடங்கினார்.

கடந்த 7 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த யாதிரெட்டி பிச்சை எடுத்து சேமித்த பணத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாயை சாய்பாபா கோவில் மற்றும் கோசாலை மேம்பாட்டுக்காக நன்கொடையாக வழங்கினார்.

தொடர்ந்து பிச்சை எடுத்து வரும் இவர் இதுவரை கோவில் காரியங்களுக்காக ரூ.8 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளார்.

பிச்சை எடுத்த பணத்தில் ஒருவர் 8 லட்சம் ரூபாய் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரின் இந்த செயலுக்காக பலரும் பாராட்டுகளை கூறி வருகின்றனர்.

SCROLL FOR NEXT