எய்ம்ஸ் டாக்டர் சஞ்சய் ராய் 
செய்திகள்

கோவாக்சின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு மிகக் குறைவானவர்களே விண்ணப்பம்: எய்ம்ஸ் டாக்டர்

கோவாக்சின் தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனைக்கு விருப்பம் தெரிவித்தவர்கள் எண்ணிக்கை 80 சதவீதம் குறைவாக உள்ளது என எய்ம்ஸ் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்போது அனைத்து நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிக்க ஆர்வம் காட்டின. அதேபோல் தன்னார்வலர்களும் தடுப்பூசி பரிசோதனைக்கு தங்களை உட்படுத்த தயார் நிலையில் இருந்தனர்.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

முதற்கட்ட பரிசோதனைக்கு 100 தன்னார்வர்கள் தேவை என அறிவித்தபோது, 4500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதன்பின் 2-ம் கட்ட பரிசோதனைக்கு 50 பேர் தேவை என்ற நிலையில் 4000 பேர் விருப்பம் தெரிவித்து அனுப்பியிருந்த விண்ணப்பங்களை நாங்கள் பெற்றோம்.

ஆனால், 3-ம் கட்ட பரிசோதனைக்கு 1500 முதல் 2000 பேர் வரை தேவை என்ற நிலையில் 200 பேர் மட்டுமே விண்ணப்பத்தியுள்ளனர். கொரோனா தடுப்பூசி மிக விரைவில் ஒவ்வொருவருக்கும் வர இருக்கும் நிலையில், ஏன் தன்னார்வலராக செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். இதனால் பரிசோதனையில் ஆர்வம் காட்டவில்லை என்று எய்ம்ஸ் டாக்டர் சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார்.