சிறுமி கற்பழிப்பு 
செய்திகள்

மத்தியபிரதேசத்தில் கை, கால்களை கட்டி 7 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மத்தியபிரதேசத்தில் கை, கால்களை கட்டி 7 வயது சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

போபால்:

மத்தியபிரதேச மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

ஜபல்பூர் மாவட்டம் தாமோக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 7 வயது சிறுமி தனியாக இருந்தார். அதே பகுதியை சேர்ந்த 20 வயதான சச்சின் சென் என்பவன் அந்த சிறுமியை கடத்திச் சென்றான். அங்குள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று கை, கால்களை கட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பின்னர் அந்த சிறுமியின் கண்களை அவன் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினான். ரத்தம் சொட்டச் சொட்டப்பட்ட நிலையில் அந்த சிறுமி காட்டுப் பகுதியில் கிடந்தார்.

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் சிறுமிக்கு மீண்டும் பார்வையை கொண்டுவர கடுமையாக போராடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் முதல்மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் குற்றவாளியை உடனே கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதோடு சிறுமிக்கு சிறந்த மருத்துவ வசதி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். சிறுமியை கடத்தி கொடூரமாக கற்பழித்த சச்சின் சென் என்பவனை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு சமயத்தில் மத்திய பிரதேசத்தில் நடக்கும் 3-வது கற்பழிப்பு சம்பவம் இதுவாகும்.