உத்தர பிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இயற்பியல் தேர்வு நடைபெற்றது. தேர்வில் காப்பியடிப்பதைத் தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் சென்று கண்காணித்தனர்.
இவ்வாறு முசாபர்நகரில் உள்ள ஒரு தேர்வு மையத்திற்கு திடீரென சென்று ஆய்வு செய்தபோது, அங்கு சில மாணவர்கள் மொத்தமாக சேர்ந்து காப்பியடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு அந்த தேர்வு மையத்தின் கண்காணிப்பாளரும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், காப்பியடித்த மாணவர்கள், தேர்வு மைய கண்காணிப்பாளர் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.