செய்திகள்

சத்திஸ்கர்: நக்சல்களுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 7 பாதுகாப்புப்படை விரர்கள் காயம்

சத்திஸ்கர் மாநிலத்தில் நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 7 பாதுகாப்புப்படை விரர்கள் காயமடைந்தனர்.

மாலை மலர்

ராய்ப்பூர்:

சத்திஸ்கர் மாநிலத்தில் நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 7 பாதுகாப்புப்படை விரர்கள் காயமடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது.

இந்நிலையில், சத்திஸ்கர் - ஜார்கண்ட் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் சத்திஸ்கர் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி நக்சல்கள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஐந்து பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் இரண்டு போலீசார் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.