செய்திகள்

ஊட்டி அருகே 500 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி

ஊட்டி அருகே 500 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். #OotyAccident

ஊட்டியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு அரசு பஸ் இன்று காலை குன்னூருக்கு புறப்பட்டது. பஸ் மதியம் 12 மணியளவில் ஊட்டி அருகே உள்ள மந்தாடா என்ற பகுதியில் வந்தது.

இதுபற்றி தெரியவந்ததும் நீலகிரி மாவட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கிடுகிடு பள்ளத்தில் கீழே இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 ஆண்கள், 1 பெண் உள்பட 4 பேர் இறந்து கிடந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துடன் அலறினர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.