தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் 
செய்திகள்

சத்தீஸ்கர் - அதிரடிப்படை நடத்திய வேட்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிரடிப்படை நடத்திய என்கவுண்டரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மாலை மலர்

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்தகான் பகுதியில் உள்ள சிதகோட்டா வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்கள் தப்பியோட முயன்றனர். இதையடுத்து அதிரடிப்படையினர் துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினர்.

இந்த என்கவுண்டரில் 7 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.