வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது.
இன்று அதிகாலை 2.30 மணியளவில், புல்புல் புயல் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசம் நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.