நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி 
செய்திகள்

கலிபோர்னியாவில் கடும் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவாகியிருந்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் நகரின் அருகே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.