சிக்கமகளூரு:
சித்ரதுர்கா மாவட்டம் செல்லக்கெரே போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க சில பெண்கள் வந்தனர். அவர்கள், முதியவர் ஒருவர் மீது போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளனர். செல்லகெரே போலீசில் அவர்கள் கொடுத்த புகார் பற்றிய விவரம் பின்வருமாறு:-
சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே டவுன் தியாகராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 60). இவர் கடந்த 6 மாதங்களாக அந்தப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் செல்போன் எண்களை வாங்கி வைத்துக் கொண்டு பேசி பழகி வந்துள்ளார். பின்னர் அவர், அந்த பெண்களுக்கு செல்போனில் ஆபாச படமும், வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இதுபற்றி எந்த பெண்களும் புகார் அளிக்க முன்வரவில்லை. இதனால் அவர் தொடர்ந்து இதுபோன்று இளம்பெண்களுக்கு ஆபாச வீடியோக்களும், படங்களும் அனுப்பி வைத்து வந்துள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண்கள் புகாரில் கூறியிருந்தனர்.
இதுகுறித்து செல்லகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ராமகிருஷ்ணன், 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு செல்போனில் ஆபாச படம், வீடியோக்களை அனுப்பி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக ராமகிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார், சித்ரதுர்கா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, ராமகிருஷ்ணனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார்.