ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்பேஸ்ஷிப் வளகத்தில் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற்ற விழாவில் அந்நிறுவனம் புதிய சாதனங்களை அறிமுகம் செய்தது. ஆப்பிள் நிறுவன ஐபோன்களின் பத்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் X முன்பதிவு இன்னும் சில மணி நேரங்களில் துவங்க இருக்கிறது.
ஐபோன் X ஸ்மார்ட்போன் அறிமுகமான அதே விழாவில் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டன. மூன்று ஐபோன்களிலும் முந்தைய ஐபோன்களை விட மேம்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ஐபோன் X ஸ்மார்ட்போனில் மட்டும் சில உயர் ரக மற்றும் அதிநவீன சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முற்றிலும் புதிய வடிவமைப்பில் துவங்கி, பல்வேறு புதிய அம்சங்கள் ஐபோன் X சாதனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவ்வாறு ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றிருக்கும் ஆறு ஐபோன் X அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வயர்லெஸ் சார்ஜிங்:
ஆப்பிள் இம்முறை அறிமுகம் செய்துள்ள மூன்று ஐபோன்களிலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கியுள்ளது. அந்த வகையில் புதிய ஐபோன்கள் Qi தர தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பத்தையே சாம்சங் நிறுவனமும் தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துகிறது.
மெமரி:
ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் போன்றே ஐபோன் X ஸ்மார்ட்போனும் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது. ஐபோன்களின் குறைந்தபட்ச மெமரி அளவுகளை ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அதிகப்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டு இன்டெர்னல் மெமரி அளவினை 16 ஜிபியில் இருந்து 32 ஜிபியாக அதிகரித்தது.
சிப்செட்:
மூன்று புதிய ஐபோன்களிலும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய A11 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் 6-கோர் CPU வடிவமைப்பை கொண்டதாகும். முந்தைய ஆப்பிள் A10 பிராசஸரை விட புதிய பிராசஸர் 25 சதவிகிதம் வரை வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்டர் ரெசிஸ்டண்ட்:
ஆப்பிள் 2017 மூன்று ஐபோன்களிலும் IP67 தரச்சான்று பெற்றிருக்கிறது. இதனால் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X ஸ்மார்ட்போன்கள் ஒரே மாதிரியான வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை பெற்றுள்ளது. முந்தைய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனிலும் இதே அம்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேமரா:
ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X ஸ்மார்ட்போனில் ஒரே மாதிரியான கேமரா அம்சங்களே வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் டூயல் கேமரா அமைப்பில் 12 எம்பி வைடு-ஆங்கிள் மற்றும் டெலிபோட்டோ கேமராக்கள், F/1.8 அப்ரேச்சர் மற்றும் டெலிபோட்டோ F/2.4 அப்ரேச்சர் கொண்டிருக்கிறது. எனினும் ஐபோன் X ஸ்மார்ட்போனில் டூயல்-ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஐபோன் 8 பிளஸ் மாடலில் வழங்கப்படவில்லை.
வடிவமைப்பு: