தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 6 வயது மகள். 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமியை நாளால்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (வயது 70) என்பவர் அடிக்கடி தின்பண்டங்களை வாங்கித் தருவதாக கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதேபோன்று ஏழுமலை சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்றார். தனது மகளை காணாததால் அவரது தாயார் தேடி சென்றபோது ஒரு மறைவான இடத்தில் இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது தனது மகளுக்கு நேர்ந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஏழுமலையை தேடி வருகின்றனர்.