நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டிடங்கள் 
செய்திகள்

சீனாவில் இன்று நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலி

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 6.42 மணியளவில் 5.4 ரிக்டர் அளவிலான  நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 63 நகரங்களில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக  த்துக்கு ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய நிலநடுக்கத்துக்கு ஒருவர் உயிரிழந்ததாகவும் 63 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.