துபாய்:
ஐக்கிய அரபு எமிரேட்டில் கடற்பகுதியில் கப்பல்களில் ஏராளமான இந்திய மாலுமிகள் சிக்கிக் கொண்டனர். ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி 22 கப்பல்களில் 97 இந்திய மாலுமிகள் சிக்கித் தவித்தனர். அவர்கள், துபாயில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாடினர். சம்பள பாக்கி, உணவு மற்றும் தண்ணீர் வசதி இல்லாமை மற்றும் கடும் வெப்பம் ஆகியவற்றோடு மாதக்கணக்கில் போராடும் மாலுமிகள், தங்களை பணியில் இருந்து விடுவித்து சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யும்படி வேண்டினர்.
இதையடுத்து அவர்களை மீட்கும் நடவடிக்கையை தூதரக அதிகாரிகள் மேற்கொண்டனர். அதன்படி, பாதி பேர் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளதாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், ஐக்கிய அரபு எமிரேட்சின் மத்திய போக்குவரத்து ஆணையத்தன் உதவியுடன் கப்பல் உரிமையாளர்கள் மற்றும் ஏஜென்டுகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி 53 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டு தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.