செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நிகழ்த்திய அதிரடி தாக்குதலில் 35 தலீபான் பயங்கரவாதிகளும், 16 ஐ.எஸ். பயங்கரவாதிகளும் கொன்று குவிக்கப்பட்டனர்.

மாலை மலர்

காபூல்:

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க ஆப்கானிஸ்தான் ராணுவம் போராடி வருகிறது. அவர்களுக்கு நேட்டோ படை பக்க பலமாக இருக்கிறது.

இந்த நிலையில், நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள குனர் மாகாணத்தில் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 35 தலீபான் பயங்கரவாதிகளும், 16 ஐ.எஸ். பயங்கரவாதிகளும் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளின் பதுங்கி குழிகள், ஆயுத கிடங்குகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன.