செய்திகள்

விளாங்குடியில் பேராசிரியை வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

மதுரையில் பேராசிரியை வீட்டில் நகை கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

மதுரை:

மதுரை விளாங்குடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப் பில் வசிப்பவர் கணபதி. இவரது மனைவி உமாதேவி. இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் உமாதேவி கூடல்புதூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

கடந்த ஆண்டு 51 பவுன் நகையை வாங்கி எனது வீட்டின் பீரோவில் வைத்திருந்தேன். சம்பவத்தன்று பீரோவை திறந்து பார்த்தபோது நகைகள் மாயமாகி இருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நகையை யாராவது கொள்ளையடித்து சென்றார்களா? அல்லது மாயமானதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews