ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் 
செய்திகள்

தமிழகம் முழுவதும் 51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யாக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை எஸ்.பி. மகேஷ்வரன் கடல் அமலாக்கப் பிரிவு எஸ்.பி. ஆக மாற்றப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யாக மணிவண்ணனும், கரூர் மாவட்ட எஸ்.பி.யாக பகலவனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி எஸ்.பி.யாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக பணியிடமாற்றம். 

SCROLL FOR NEXT