செய்திகள்

ராணுவ தளவாட கண்காட்சி - திருவிடந்தைக்கு கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள்

திருவிடந்தையில் ‘டெபெக்ஸ்போ - 18’ 10-வது ராணுவ தளவாட கண்காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்க 50 சிறப்பு பஸ்கள் நாளை வரை இயக்கப்படுகின்றன.#DefenceExpo2018

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் கடந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி (நாளை) வரை சென்னை அருகே உள்ள திருவிடந்தையில் ‘டெபெக்ஸ்போ - 18’, எனும் பெயரில் 10-வது ராணுவ தளவாட கண்காட்சி நடக்கிறது. இக்கண்காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்க ஏதுவாக ஏற்கனவே அந்த வழியாக இயக்கப்படும் 45 வழித்தட பஸ்களுடன், கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் தாம்பரம், திருவான்மியூர், அடையாறு, மாமல்லபுரம் போன்ற இடங்களில் இருந்து திருவிடந்தைக்கு மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படுகின்றன.

மேலும் வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து கண்காட்சி நடைபெறும் இடத்துக்கு செல்ல இலவச மினி பஸ் வசதியும் மாநகர போக்குவரத்து கழகத்தால் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #DefenceExpo2018

SCROLL FOR NEXT