செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின் போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். #securityforce #youthskilled

மாலை மலர்

ஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகளுடனான சண்டையின் போது நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2 தீயணைப்பு வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. அவர்களை விரட்டியடிப்பதற்காக பாதுகாப்பு படையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு பிரயோகம் ஆகியவற்றை கையாண்டனர்.