நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள வாழையில் டீக்கடை நடத்தி வருபவர் இளையபெருமாள் (வயது 76). அவா் நேற்று காலை 6 மணியளவில் தனது கடையை திறந்து கடைக்கான போர்டை வெளியே வைத்தபோது, 3 மர்மநபர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். அதில் ஒருவன் இறங்கி வந்து இளையபெருமாள் இடம் பேச்சுக் கொடுத்துள்ளான். அவன் திடீரென்று இளையபெருமாள் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு, தயாராக நின்ற ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளான்.
அவனுடன் வந்த மற்ற 2 பேருடன் மோட்டார் சைக்கிள்களில் சாத்தான்குளம் செல்லும் ரோட்டில் தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து நாசரேத் போலீசில் இளையபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கேஸ்வரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகையை வழிப்பறி செய்து கொண்டு தப்பிய 3 மர்மநபர்களை தேடி வருகின்றனர்.