செய்திகள்

லெபனான்: அகதிகள் முகாம் மீது தற்கொலைப் படையினர் ஆவேச தாக்குதல் - இளம்பெண் பலி

லெபனான் நாட்டின் கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையோரம் உள்ள அகதிகள் முகாமில் தற்கொலைப் படையை சேர்ந்த 5 பேர் நடத்திய மனிதகுண்டு தாக்குதலில் ஒரு இளம்பெண் உயிரிழந்தார். ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

மாலை மலர்

லெபனான் நாட்டின் கிழக்கு பகுதியில் சிரியா நாட்டின் எல்லையோரத்தில் உள்ள அர்சலான் என்ற இடத்தின் அருகேயுள்ள உள்ள அல்-நவுர் அகதிகள் முகாமில் சிரியா உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி வந்த பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் சிரியாவில் இருந்து தப்பிவந்த ஐ.எஸ். தீவிரவாதிகளும் சிரியாவை சேர்ந்த போராளி குழுவினரும் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.