செய்திகள்

உ.பி. மாநிலத்தில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மிர்சாபூர் பகுதியில் இன்று மாலை மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மிர்சாபூர் பகுதியில் இன்று மாலை மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள மடிஹான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லுசா கிராமத்தின் வழியாக இன்று மாலை சென்ற ஒரு கார், திடீரென தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் அந்த காரில் சென்ற மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட 3 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews

SCROLL FOR NEXT