செய்திகள்

4-வது ஒருநாள் கிரிக்கெட்: மீண்டும் இலங்கையை வீழ்த்தி அசத்தியது ஜிம்பாப்வே

ஹம்பன்தோடாவில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி பெற்றுள்ளது.

மாலை மலர்


சதம் அடித்த டிக்வெல்லா

பின்னர் 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக மசகட்சா, மிர் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். மசகட்சா 36 பந்தில் 28 ரன்களும், மிர் 30 பந்தில் 43 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த முசகண்டா 23 பந்தில் 30 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.


மழையினால் மைதானம் மூடப்பட்டிருக்கும் காட்சி

ஜிம்பாப்வே அணி சரியாக 21 ஓவரில் 139 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் நீண்ட நேரமாக ஆட்டம் தடைப்பட்டது. இறுதியாக மழை நின்றதும் ஜிம்பாப்வே அணிக்கு 31 ஓவரில் 219 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி கடைசி 60 பந்தில் 80 ரன்கள் தேவைப்பட்டது.

ஒருபக்கம் எர்வின் நிலைத்து நின்ற விளையாட மறுக்கம் சிக்கந்தர் ரஸா (10 பந்தில் 10 ரன்), வாலர் (13 பந்தில் 20 ரன்கள்) அதிரடியாக விளையாடினர். இதனால், ஜிம்பாப்வே அணி 29.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எர்வின் 55 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.


30 பந்தில் 43 ரன்கள் குவித்த மிர்