செய்திகள்

உ.பி.யில் மீண்டும் சோகம்: ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனையில் 49 குழந்தைகள் பலி

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரூக்காபாத் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி:

உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இந்த நிலையில்,  பரூக்காபாத் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

குழந்தைகள் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை மட்டும் காரணமல்ல மருந்துகள் பற்றாக்குறையும் தான் என்று கூறப்படுகிறது. 

மருத்துவமனையின் உயர் அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள பரூக்காபாத் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT