மாட்ரிட்:
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் இருக்கும் பிரான்சிகா ரெயில் நிலையத்தில் இன்று காலை நுழைந்த பயணிகள் ரெயிலானது பிரேக் பிடிக்காமல் நடைமேடையில் இருந்த தடுப்புக் கட்டைகள் மீது பயங்கர வேகத்துடன் மோதி நின்றது.
இந்த விபத்தில் ரெயிலில் இருந்த 48 பயணிகள் காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் சிறிது நேரம் அந்நகரில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர், நிலமை சீரானதும் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.