ராணுவ பலத்தில் முதன்மை இடத்தில் உள்ள நாடுகள் தங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தும் ராணுவ தளவாட கண்காட்சி உலகின் பல்வேறு நகரங்களில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில், இந்திய ராணுவத்தின் ஆயுத வல்லமையை பறைசாற்றும் விதமாக சென்னை திருவான்மியூரில் இருந்து சுமார் 19 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவிடந்தையில் வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதியில் இருந்து 14-ம் தேதிவரை ராணுவ தளவாட கண்காட்சி நடத்த இந்திய ராணுவம் தீர்மானித்தது.
தமிழகத்தின் தலைநகரான சென்னை அருகே நடைபெறும் இந்த கண்காட்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், இஸ்ரேல், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.