செய்திகள்

4000 ஆண்டு பழமையான எலும்பு ஆபரணங்கள் ஐதராபாத்தில் கண்டெடுப்பு

தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத் அருகில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான எலும்புகளால் செய்யப்பட்ட ஆபரணங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மாலை மலர்

ஐதராபாத்:

தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத் அருகில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான மற்றும் வித்தியாசமான பொருள்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து தொல்லியல் துறை இயக்குனர் என்.ஆர்.விசாலாட்சி கூறியதாவது,

ஐதராபாத் அருகில் உள்ள நர்மெட்டா பகுதியில் பலகட்டங்களாக நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பல வித்தியாசமான பொருட்கள் மற்றும் எலும்புகளால் செய்யப்பட்ட ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை 4 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு  உள்ளவையாக இருக்கலாம். ஆனால் அவை மிகவும் நேர்த்தியான முறையில் செய்யப்பட்டுள்ளன. எங்கள் துறை தொடங்கிய 100 ஆண்டுகளில் இது வரை இது போன்ற சரியாக மற்றும் சமமாக வெட்டி செய்யப்பட்ட ஆபரணங்களை பார்த்தது இல்லை. அதன் வடிவமைப்புகள் மிகவும் அழகாக உள்ளது.

எவ்வித வசதியும் இல்லாத அக்காலத்தில் கற்களை சரியான அளவு எடுத்து செய்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவங்கள் பதிக்கப்பட்ட கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரத்தை பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.