கைது செய்யப்பட்ட பாண்டி. 
செய்திகள்

கொடைக்கானலில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது

கொடைக்கானலில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 57 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

கொடைக்கானல்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டி (வயது 57). சம்பவத்தன்று இவர் கொடைக்கானல் அரசுப்பள்ளி விளையாட்டு மைதானம் அருகே நடந்த தனது உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக வந்தார்.

அப்போது அங்குள்ள மதுக்கடைக்கு சென்று மது குடித்து வந்தார். பின்னர் போதையில் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை அழைத்து ஆசை வார்த்தை கூறி கடைக்கு செல்வதுபோல் தூக்கிச்சென்று பாலியல் தொந்தரவு செய்தார்.

இதனால் அந்த குழந்தை சத்தம் போட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து குழந்தையை மீட்டு பாண்டியை பிடித்து கொடைக்கானல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாண்டியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT