செய்திகள்

புகாரை விசாரிக்கச்சென்ற போலீசார் மீது தாக்குதல் - 4 பேர் கைது

நரிக்குடி அருகே புகாரை விசாரிக்கச் சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள முடுக்கன்குளத்தில் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் (வயது29), கணேஷ், ராமச்சந்திரன் (31), ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி (30) ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அவர்கள் மீனாட்சிபுரம் விலக்கு பகுதியில் மதுபோதையில் நின்றுள்ளனர். அப்போது அந்த வழியே வந்த தனியார் பஸ்சை மறித்து தகராறு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஏ.முக்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது மது போதையில் இருந்த 4 பேரும் போலீசாரையும் தாக்கி உள்ளனர். இதனை தொடர்ந்து பழனி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT