சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஒருநாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் ஏற்கனவே 12 அணிகள் உள்ளன.
தற்பேது மேலும் 4 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் 13-வது மற்றும் 14-வது அணிகளாக இணைக்கப்பட்டு உள்ளார். தரவரிசைப்பட்டியலில் இணைய குறைந்தது 4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும்.
இந்த புதிய அணிகள் சேர்க்கையினால் 12 அணிகளின் தரவரிசையில் மாற்றம் ஏற்படாது. இந்த 4 அணிகள் சேர்க்கப்பட்டு இருப்பதால் இவற்றுடன் ஆடும் ஒருநாள் போட்டிகளும் இனி தரவரிசை புள்ளிகள் கணக்கீட்டில் சேர்த்து கொள்ளப்படும்.
கடந்த ஆண்டு ஐ.சி.சி. உலக லீக் போட்டியில் வென்றதன் மூலம் நெதர்லாந்து அணி ஒருநாள் போட்டிக்கான அந்தஸ்சை பெற்றது.