கோப்புப் படம் 
செய்திகள்

காஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை - 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட டயல்காம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்று காலை அங்கு விரைந்துச் சென்ற பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு செல்லும் நாற்புற சாலைகளையும் சுற்றி வளைத்தனர். அங்கு வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.