செய்திகள்

3-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 247 ரன்னில் ஆல்அவுட்; பாகிஸ்தான் 376

டொமினிகாவில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 247 ரன்னில் ஆல்அவுட் ஆகியுள்ளது.

மாலை மலர்

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டொமினிகாவில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி அசார் அலி (127), பாபர் ஆசம் (55), மிஸ்பா உல் ஹக் (59), சர்பிராஸ் அஹமது (51) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சேஸ் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்திருந்தது. டவ்ரிச் 20 ரன்னுடனும், ஜேசன் ஹோல்டர் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அப்பாஸ் அபாரமாக பந்து வீசி கடைநிலை வீரர்களை அடுத்தடுத்து அவுட்டாக்கினார்.

பிஷூ, ஜோசப், கேப்ரியல் ஆகியோர் டக்அவுட்டில் வெளியேற்றினார். சேஸ் 69 ரன்னிலும், டவ்ரிச் 20 ரன்னிலும் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் 115 ஓவரில் 247 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது. ஹோல்டர் 30 ரன்களுடன் அவுட்டாகமல் இருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது அப்பாஸ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 129 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்த முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.