செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3-வது டெஸ்ட்: முதல் நாளில் பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி, பாபர் ஆசம் அரைசதம் அடித்தனர்.

அடுத்து பாபர் ஆசம் களம் இறங்கினார். அவர் 2-வது விக்கெட்டுக்கு அசார் அலியுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாபர் ஆசம் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து யூனிஸ்கான் களம் இறங்கினார். யூனிஸ்கானுக்கு இது கடைசி போட்டி என்பதால் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி 69 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருக்கும்போது மழைக்காரணமாக முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது.


கடைசி போட்டியில் விளையாடும் யூனிஸ்கானுக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வரவேற்பு அளித்த காட்சி