கோப்புப்படம் 
செய்திகள்

கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கேரள மாநில கொரோனா அப்டேட்ஸ்

கர்நாடக மாநிலத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,64,485 ஆக உயர்ந்துள்ள நிலையில், குஜராத்தில் 1,39,614 ஆக உள்ளது.

மாலை மலர்

கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,930 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31,796 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 490 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 19,34,378 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,51,097 பேர் குணமடைந்துள்ளனர். 18,776 பேர் உயிரிழந்துள்ளனர். 5,64,485 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,832 பேர் குணமடைந்துள்ளனர். 92 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 12,87,603 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10,88,264 பேர் குணமடைந்துள்ளனர். 8,707 பேர் உயிரழந்துள்ளனர். 1,90,632 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,770 பேர் குணமடைந்த நிலையில், 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் இன்று புதிதாக 35,801 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29,318 பேர் குணமடைந்த நிலையில், 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,4,72,951 பேர் குணமடைந்துள்ளனர். 5,814 பேர் உயிரிழந்துள்ளனர். 4,23,514 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.