பாகிஸ்தானில் பாராளுமன்றம் மற்றும் 4 மாகாண சட்டசபைகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். வாக்குச்சாவடிக்கு வரும் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். என்னும் ஒரு சில பகுதிகளில் வன்முறை மற்றும் தாக்குதல் நடைபெற்றது தேர்தல் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் வாக்குச்சாவடி அருகே போலீஸ் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 5 போலீஸ்காரர்கள் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர்.